சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மாவீரன்' படத்தின் டிரைலர் வெளியானது

டிரைலர் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

சென்னை,

சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மாவீரன் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இரவு 8 மணிக்கு மாவீரன் படத்தின் டிரைலர் வெளியானது . இந்த டிரைலர் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT