டிரிப், தூக்குத்துரை ஆகிய படங்களின் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மனிதன் தெய்வமாகலாம்'. விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் குஷி ரவி, ஒய்ஜி மகேந்திரன், கவுசல்யா, கவுசி ரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ள இந்த படத்துகுக ரவி வர்மா. கே ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபக் படத்தொகுப்பு செய்கிறார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இயற்கையும், அமைதியும் சூழ்ந்த கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது.
இந்த நிலையில், 'மனிதன் தெய்வமாகலாம்' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'மனிதன் தெய்வமாகலாம்' திரைப்படம் வருகிற 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.