மும்பை,
நடிகரும் தவெக தலைவருமான விஜய் சமீபத்தில் நடிகை திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் தனது விவாகாரத்து மனுவில் விஜய்க்கு வேறொரு நடிகையுடன் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்புக்கு அடங்குவதற்குள் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. இந்த நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகை குஷ்பு, இவ்விவகாரம் குறித்து பேசியுள்ளார். இந்த விவகாரத்தை ஏன் இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாற்றுகின்றனர் என்பதை தாம் புரிந்துகொள்ள முடியவில்லை என்று குஷ்பு கூறியுள்ளார்.
இது தொடர்பாக குஷ்பு கூறியிருப்பதாவது:- இந்த சம்பவத்தில் மக்களுக்கு என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை. இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மக்களை பாதிக்கிறதெனில் அதைப் பற்றி பேசலாம். இல்லையெனில் ஏன் இதை இவ்வளவு பெரிய விஷயமாக மாற்ற வேண்டும்? அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை பார்த்துக்கொள்வார்கள். இதனால் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.” என்று கூறியுள்ளார்.