சினிமா செய்திகள்

வாக்கு என்பது நம் உரிமை: அதை விற்க கூடாது- இயக்குனர் சேரன்

இயக்குனர் சேரன் வெளியிட்டுள்ள பதிவில் வாக்காளர்களுக்கு முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

சென்னை,

இயக்குனர் சேரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் வாக்காளர்களுக்கு முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

அவரது பதிவில், “தேர்தலில் வாக்கு என்பது நம் அடிப்படை உரிமை. அதை பணத்திற்கு விற்கக் கூடாது. ₹5000க்கு வாக்கை விற்பதன் மூலம் 5 ஆண்டுகளுக்கான நல்லாட்சியை இழக்கிறோம். இதனால் அரசால் கிடைக்க வேண்டிய பல்வேறு நலன்களும் பாதிக்கப்படுகின்றன,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “வாக்கை விற்கும் பழக்கம் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு வழிவகுக்கும். கேள்வி கேட்கும் உரிமை குறைந்து விடும். எனவே வாக்காளர்கள் அனைவரும் பணம் கொடுத்து வாக்கு வாங்க முயலும் அரசியல் நபர்களைத் தடுக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, “மாற்றம் கண்டிப்பாக நிகழும். அது மக்கள் விரும்பும் நல்லாட்சியாக மலரும்,” என்று அவர் தனது பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.