சினிமா செய்திகள்

சஞ்சய் தத்தின் 'தி பூட்னி' பட டிரெய்லர் வெளியீடு

சஞ்சய் தத் பாலிவுட்டில் ஹார்ர்-காமெடி படமான 'தி பூட்னி'-ல் நடித்துள்ளார்

மும்பை,

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சஞ்சய் தத். தற்போது அவர் தென்னிந்திய சினிமாக்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சஞ்சய் தத்.

தற்போது இவர், பாலிவுட்டில் உருவாகி வரும் ஹாரர்-காமெடி படமான 'தி பூட்னி'-ல் நடித்துள்ளார். இதில், இவருடன் மவுனி ராய் மற்றும் சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சித்தந்த் சச்தேவ் இயக்கி உள்ள இப்படம் அடுத்த மாதம் 18-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

View this post on Instagram

SCROLL FOR NEXT