சென்னை,
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கன கராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் சார்பில் '29' என்ற படம் தயாராகி இருக்கிறது. 'மேயாத மான்', 'ஆடை' படங்களை இயக்கி கவனம் ஈர்த்த ரத்னகுமார் டைரக்டு செய்கிறார். விது, பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்கள்.
சென்னையில் நடந்த பட விழாவில் நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி பங்கேற்று பேசும் போது, "லோகேஷ் கனகராஜ் திரைக்கு வருவதற்கு முன்பே என் நண்பர். லோகேஷ் கனகராஜ் ஏன் ஓட்டுப்போடவில்லை என்று விமர்சிக்கிறார்கள். தேர்தல் தேதியன்று, விமான நிலை யத்துக்குள் வந்தும் சரியான நேரத்தில் அவரால் விமானத்தில் ஏறமுடியவில்லை. அதற்குள் 'கேட்' மூடிவிட்டார்கள். இந்த உண்மையை நான் உலகுக்கு சொல்லிக்கொள்கிறேன். நானும் அப்போது அங்குதான் இருந்தேன்.
லோகேஷ் கனகராஜ் தயவு செய்து முடிவெட்டி மீண்டும் கலை யாகி விடுங்கள். உங்கள் முகமே எனக்கு மறந்து போய்விட் டது. அதேபோல கார்த்திக் சுப்புராஜூம் எனக்கு நண்பர். எதை பார்த்தும் அலட்டிக் கொள்ள மாட் டார். சூர்யாவுக்கு 'ரெட்ரோ' என்ற படத்தை கொடுத்து, 'தி ஒன்' என்ற அடையாளத்தையும் கார்த் திக் சுப்புராஜ் ஏற்படுத்திக் கொடுத்தார். 'ரெட்ரோ' மாதிரி சூர்யாவுக்கு படம் தரணும் என அவரது ரசிகர்கள் என்னை மிரட்டுகிறார்கள். அது அன்பு மிரட்டல். எனவே சூர்யாவுக்கு 'தி ஒன்' என்ற டைட்டிலை 'கருப்பு' படத்தில் நாங்களும் போடுகிறோம்", என்றார்.