சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்று ஆதரவு கட்சிகளின் துணையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 10-தேதி தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார்.
விஜய் பதவியேற்றது முதல் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வரை பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல்-அமைச்சர் விஜயை பிரபல இயக்குனரும் நடிகரான தியாகராஜன் மற்றும் அவரது மகன் நடிகர் பிரசாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.