சினிமா செய்திகள்

மிகவும் எக்சைட்டிங்கான தேர்தலாக இது இருக்கிறது- சிவகார்த்திகேயன்

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பள்ளியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கினை செலுத்தினார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் தங்கள் வாக்கினை செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பள்ளியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கினை செலுத்தினார்.

மனைவியுடன் வந்து வாக்களித்த சிவகார்த்திகேயன் ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிய்லி கூறியதாவது: மிகவும் எக்சைட்டிங்கான தேர்தலாக இது இருக்கிறது . இந்த தேர்தலில்தான்சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகமாக வெளிப்படுகிறது. இவ்வளவு முக்கியமான தேர்தலின் முடிவுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்று பதிவிட்டார்.