சினிமா செய்திகள்

நான் நடித்த படங்களிலிலேயே இதில்தான் எனக்கு அதிக ஆக்‌ஷன் காட்சிகள் - மஞ்சு வாரியர்

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் வருகிற 17ந் தேதி வெளியாகிறது.

ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ்டர் எக்ஸ்’. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஷ்ணு விஷாலை வைத்து எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கியுள்ளார். திபு நிபுணன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படம் ஸ்பை ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படம் வரும் 17ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் மஞ்சு வாரியர் கலந்து கொண்டு பேசுகையில், “இந்த படத்திற்கு ஓகே சொல்ல கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டேன். காரணம் படத்தின் கதை புதிய களம் மற்றும் அதில் சில சந்தேகங்கள் இருந்தது. அதை புரிந்து கொண்டு நடிக்க நேரம் எடுத்துக்கொண்டேன். இந்தக் கதை நாம் அன்றாடம் பார்க்கும் வாழ்க்கையில் நடப்பவை அல்ல. பொதுவாக ஸ்பை ஜானர் படங்களில் பெண் கதாபாத்திரம் ஒரு நாயகர்களுக்கு துணை நிற்கும் கதாபாத்திரமாகத்தான் பார்த்திருப்போம். ஆனால் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக எழுதப்பட்டிருக்கிறது. அந்த ரோல் எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம்.

இதுவரை நான் நடித்த படங்களில் இந்தப்படத்தில் தான் அதிக ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறேன். அப்போது ஏற்பட்ட காயங்களும் சிராய்ப்புகளும் இப்போதும் என் உடலில் இருக்கிறது. அதை அழகிய நினைவாக வைத்துக்கொள்கிறேன். இதில் நடித்தது சவால்கள் நிறைந்ததாகவும் அழகான அனுபவங்களாகவும் அமைந்தது” என்றார்.

SCROLL FOR NEXT