சினிமா செய்திகள்

இளையராஜா, ரஹ்மான் சிறந்த படைப்பாளிகள் ஆனதற்கு இதுதான் காரணம் - மிஷ்கின்

நிஜ வாழ்க்கையில் ஆணிடம் இருக்கிற பெண்தன்மை, அரவணைப்பு, பாசம், பரிதாபம், பரிதவிப்பு யாரிடம் இருக்கிறதோ அவர் ஒரு மிக சிறந்த மனிதநேயமாக உள்ளவர்கள். என்று மிஷ்கின் பேசியுள்ளார்.

சென்னை,

இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜய் ஆண்டனி, பின்னர் நடிகராகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது ‘பிச்சைக்காரன்’ திரைப்பட இயக்குநர் சசியுடன் இணைந்து ‘நூறு சாமி’ என்ற படத்தில் நடித்துள்ளார். பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

புரமோஷன் பணியில் படக்குழு

இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சசியை மட்டும் தான் நான் சாமியாக பார்க்கிறேன்

அந்தவகையில், சமீபத்தில் நடைபெற்ற ‘நூறு சாமி’ பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இயக்குநர் மிஷ்கின் பேசியது கவனத்தை பெற்று வருகிறது. அதாவது, சினிமாவில் சாமிகள் கிடையாது ரொம்ப கம்மி ஒரு 10 பேர் தேர்வார்களா என்பது டவுட்... அதில் சசி சார் மட்டும் தான் நான் சாமியாக பார்க்கிறேன். சசி சார் மனிதர்களை உற்று பார்த்து ஒரு தாய் உள்ளதோடு பார்க்க கூடியவர் பார்க்க கூடியவர். ஆண்களிடம் அதிசயபடுவது என்ன என்றால் ஆணிடம் உள்ள பெண்மை தன்மை. சமூகம் ஆண்களை ஆண்களாக பார்க்கிறது பெண்களை பெண்களாக பார்க்கிறது ஆனால் அனிமா & அணிமென்ஸ் இரண்டும் நமது உடம்பில் இருக்கிறது.

இளையராஜா, ரகுமான் இரண்டு பேரிடம் ரொம்ப பெண்தன்மை இருக்கும் அதனால்தான் அவர்கள் மிக சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் ஆணிடம் இருக்கிற பெண்தன்மை, அரவணைப்பு, பாசம், பரிதாபம், பரிதவிப்பு யாரிடம் இருக்கிறதோ அவர் ஒரு மிக சிறந்த மனிதநேயமாக உள்ளவர்கள். என்று மிஷ்கின் பேசியுள்ளார்.