சினிமா செய்திகள்

"அதை செஞ்சிருக்கவே கூடாது" - பிரபாஸின் 'தி ராஜா சாப்' தோல்வி குறித்து தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி

‘தி ராஜா சாப்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

ஐதராபாத்,

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘தி ராஜா சாப்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததற்கான காரணங்கள் குறித்து அதன் தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் மனம் திறந்துள்ளார்.

பொங்கல் பண்டிகை

இயக்குநர் மாருதி இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் உருவான ‘தி ராஜா சாப்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியானது. சுமார் ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் ‘தி ராஜா சாப்’ திரைப்படம், உலகளவில் சுமார் ரூ.208 கோடி வசூலித்ததாக தெரிவிறது.

பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்து மற்றும் படத்தின் பிரமாண்டமான வெளியீடு ஆகியவற்றைத் தாண்டி, எதிர்பார்த்த வரவேற்பை பெற முடியாதது படக்குழுவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, படத்தின் தோல்விக்கான காரணங்கள் குறித்து தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் பகிர்ந்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

அவர் பேசுகையில், “நாங்கள் செய்த முக்கிய தவறுகளில் ஒன்று, படத்தை பொங்கல் பண்டிகை காலத்தில் வெளியிட்டதுதான். வேறு ஒரு நேரத்தில் வெளியிட்டிருந்தால் படத்தின் முடிவு வித்தியாசமாக இருந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.

முதல் நாள் காட்சி

படம் வெளியான முதல் நாளில் திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் தாமதமாகத் தொடங்கியதும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

டிக்கெட் விலை

மேலும், “எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒரு படத்திற்காக டிக்கெட் விலையை உயர்த்த முயன்றது இதுவே முதல் முறை. அப்படிச் செய்திருக்கக் கூடாது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். இவ்வாறு படம் பாதித்ததற்கு பல காரணங்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT