சினிமா செய்திகள்

வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள இதுதான் தேவை!- நடிகை ரிது வர்மா

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரிது வர்மாவிடம், வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான விஷயம் எது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

சென்னை,

“துணிச்சல்தான், அது இருந்தால் எந்தச் சோதனைகளையும் கடந்து செல்லலாம். என் வாழ்க்கையில் ஏற்பட்ட மேடு பள்ளங்களைக் கடந்து வருவதற்கும் அந்தத் துணிச்சல்தான் உதவியது” என்று ரிது வர்மா தெரிவித்தார்.

நடிகை ரிது வர்மா

தெலுங்கில் 2013-ம் ஆண்டு வெளியான ‘பாட்ஷா’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிது வர்மா. தமிழில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மார்க் ஆண்டனி’, ‘வேலையில்லா பட்டதாரி-2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் ரிது வர்மா நடித்திருக்கிறார். நீண்ட காலமாக இப்படம் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கிறது. இருப்பினும், தெலுங்கில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

வாழ்க்கையில் துணிச்சல் முக்கியம்

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரிது வர்மாவிடம், வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான விஷயம் எது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், “துணிச்சல்தான். அது இருந்தால் எந்தச் சோதனைகளையும் கடந்து செல்லலாம். என் வாழ்க்கையில் ஏற்பட்ட மேடு பள்ளங்களைக் கடந்து வருவதற்கும் அந்தத் துணிச்சல்தான் உதவியது” என்று தெரிவித்தார்.

பெண்களுக்குத் துணிச்சல் அவசியம்

மேலும், பெண்களுக்குத் துணிச்சல் மிகவும் அவசியம் என்று குறிப்பிட்ட ரிது வர்மா, “குறிப்பாகப் பெண்களுக்குத் துணிச்சல் இருக்க வேண்டும். அதுதான் நம்மைக் கரை சேர்க்கும்” என்று கூறினார்.

SCROLL FOR NEXT