சினிமா செய்திகள்

35 வயதுக்கு மேல் இருப்பவர்கள் இதை தவறாமல் செய்ய வேண்டும் - ஆர்ஜே பாலாஜி அறிவுரை

ஆரோக்கியம் குறித்து ஆர்ஜே பாலாஜி பகிர்ந்துள்ள இந்த கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

சென்னை,

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்ஜே பாலாஜி, 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

ரேடியோ ஜாக்கி, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்துள்ள ஆர்ஜே பாலாஜி, உடல்நலம் தொடர்பாக முக்கிய விழிப்புணர்வு கருத்தை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், நடிகர் சூர்யாவுக்கு கம்பேக் படமாகவும் அமைந்தது.

'மாஸ்டர் செக்-அப்' அவசியம்

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்ஜே பாலாஜி, 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை (Master Health Check-up) மேற்கொள்வது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

ஆண்டுதோறும் பரிசோதனை செய்கிறேன்

இதுகுறித்து பேசிய அவர், "30, 35 வயதுக்கு மேல் இருந்து நான் வருடத்திற்கு ஒருமுறை மாஸ்டர் செக்-அப் செய்து வருகிறேன். 35, 40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும், அரசு மருத்துவத் திட்டங்கள் மற்றும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் சுகாதார பேக்கேஜ்கள் மூலமாகவும் உடல் பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.

குடும்பத்தில் உள்ள பெண்கள் உட்பட அனைவரும் தங்களது உடல்நலத்தில் விழிப்புணர்வுடன் இருந்து, குறிப்பிட்ட இடைவெளியில் உடல் பரிசோதனையை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆர்ஜே பாலாஜி வலியுறுத்தினார்.

விழிப்புணர்வுக்கு பாராட்டு

ஆரோக்கியம் குறித்து ஆர்ஜே பாலாஜி பகிர்ந்துள்ள இந்த கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, முன்கூட்டியே நோய்களை கண்டறிய ஆண்டுதோறும் உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற அவரது விழிப்புணர்வு செய்திக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.