சினிமா செய்திகள்

டைகர் ஷ்ராப் - சஞ்சய் தத் இணையும் “பாகி 4” டிரெய்லர் வெளியீடு

‘பாகி 4’ படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

பாலிவுட்டின் பிரபல ஆக்ஷன் ஹீரோ டைகர் ஷ்ராப் மற்றும் சஞ்சய் தத் இணைந்து நடிக்கும் ஆக்ஷன் திரைப்படமாக பாகி 4 உருவாகியுள்ளது. இந்த படத்தை சாஜித் நதியாட்வாலா எழுதி தயாரித்திருக்கிறார். படத்தை ஹர்ஷா இயக்கியுள்ளார். படத்தில் ஹர்னாஸ் சந்து, சோனம் பாஜ்வா, ஷ்ரேயாஸ் தல்பதே, சௌரப் சச்தேவா, உபேந்திர லிமாயே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.டிரெய்லர் முழுவதும் ரத்தக் களரியாக அமைந்துள்ளது.

டிரெய்லரில் டைகர் ஷ்ராப் வில்லன்களை அரிவாளால் நறுக்குவது, தலையை அறுப்பது, ஒருவரின் உடலை இரண்டாக வெட்டுவது போன்ற கொடூர ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பாகி 4 வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதே தேதியில் விவேக் அக்னிஹோத்ரியின்தி பெங்கால் பைல்ஸ் படமும் வெளியாக உள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் பெரிய போட்டி காத்திருக்கிறது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

SCROLL FOR NEXT