சினிமா செய்திகள்

ஆள் சொல்லாததை நாள் சொல்லும்: மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் வைரமுத்து பதிவு

கவிஞர் வைரமுத்து நேற்று அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

சென்னை,

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கலைஞர் திருமகனே!

காவல் நாயகனே!

வாக்குப்பதிவுக்குப் பின்னை

சந்தித்தேன் நேற்று

அறிவாலயத்தில் உன்னை

உழைப்பின் களைப்பில்லாமல்

துடைத்துவைத்த ஆப்பிளாய்த்

துலங்கினாய் நீ

அச்சார வாழ்த்தாய்ப்

பொன்னாடை விரித்துப்

போர்த்தினேன்

“உன்

உழைப்பும் சாதனையும்

உன் கனவை நனவாக்கும்”

என்று உரக்கச் சொன்னேன்

வெற்றியில்

விம்முவதும் இல்லை

தோல்வியில்

பம்முவதும் இல்லை

என்ற விவேகச் சொல்லே

வீரனுக்கு அழகு

நீ வெற்றியே பெறுவாய்

கவனித்தேன்

வெற்றி முன்னோட்டம்

சொல்லவந்த வேட்பாளர்களிடம்

நீ கேட்ட ஒரே கேள்வி

'இரண்டாம் இடம் யாருக்கு?’

அதிலேயே தெறிக்கவிட்டாய்

முதலிடம் உனக்கென்னும்

முடிவை

தனிவலிமை கொண்டாலும்

துணை வலிமையின்

தோள் சேர்ப்பாய்

மண் மொழி மானம் காக்க

மீண்டும்

உதயசூரியனை எழுப்பிவிட்டு

உழைக்கச் செல்வாய்

ஆட்சி - கட்சி

இரண்டையும் பழுதுபார்ப்பாய்

ஆளாளுக்கு

ஒன்று சொல்கிறார்கள்;

நல்லதை மட்டுமே நம்பு

ஆள் சொல்லாததை

நாள் சொல்லும்

அந்த நாள்

‘மே நாலு’ என்னும்

நல்லநாள்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.