சினிமா செய்திகள்

கார்த்திக் சுப்பராஜ்-ராணா டகுபதி இணைந்து தயாரிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு

இந்த படத்தை இலங்கைத் தமிழர் சோமிதரண் இயக்கியுள்ளார்.

சென்னை,

கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின் 'ஸ்பிரிட் மீடியா' தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது.

நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தயாரிப்பு நிறுவனம் 2005ல் உருவாக்கப்பட்டது. இதில் 70-க்கும் மேல்பட்ட திரைப்படங்கள் உருவாகியுள்ளன. அதேபோல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்தை 2015ல் தொடங்கினார். இந்தத் தயாரிப்பில் பத்துக்கும் மேல்பட்ட படங்கள் உருவாகியுள்ளன.

இந்நிலையில், இந்த இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள புதிய படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த புதிய படத்திற்கு "நீளிரா" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இலங்கைத் தமிழர் சோமிதரண் இயக்கியுள்ளார். இதில் நவீன் சந்திரா, விது ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT