சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு

அறிமுக இயக்குனர் பிரவீன் எஸ். விஜய் இயக்கிய இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில், புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் பிரவீன் எஸ். விஜய் இயக்கிய இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் நீதிமன்றத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு "சத்தியவான் சாவித்திரி" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் செக்ண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT