சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி - அதிதி ராவ் நடிக்கும் மௌனப் படம்...’காந்தி டாக்ஸ்’ டீசர் வெளியீடு

இப்படம் வருகிற 30-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

மராத்தி திரைப்பட இயக்குனர் கிஷோர் பெலேக்கரின் காந்தி டாக்ஸ் திரைப்பட டீசர் வெளியாகி இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சுவாமி மற்றும் சித்தார்த் ஜாதவ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 30-ம் தேதி வெளியாக உள்ளது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம் காந்தி நினைவு நாளில் வெளியாக இருக்கிறது.

ஜீ ஸ்டீடியோஸ், கையோரிஸ், பின்க்மூன் அன்ட் மூவிமில் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. இந்தப் படம் கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியத் திரைப்பட விழாவில் தேர்வாகியது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.