சினிமா செய்திகள்

‘ஜவான்’ சாதனையை காலி செய்த ‘டாக்சிக்’.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் வெளியான ‘டாக்சிக்’ திரைப்படம் முதல் நாளிலேயே மாஸ் காட்டியுள்ளது.

சென்னை,

கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், வசூலில் ‘டாக்சிக்’ திரைப்படம் முதல் நாளிலேயே மாஸ் காட்டியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.140.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘டாக்சிக்’. கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படம் நேற்று (ஆகஸ்ட் 26) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் வெளியான இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலவையான விமர்சனங்கள்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘டாக்சிக்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக, படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் யாஷின் நடிப்பு கவனம் பெற்றுள்ளன.

முதல் நாளில் ரூ.140.75 கோடி வசூல்

கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், வசூலில் ‘டாக்சிக்’ திரைப்படம் முதல் நாளிலேயே மாஸ் காட்டியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.140.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.120.75 கோடியும், வெளிநாடுகளில் ரூ.20 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘ஜவான்’ சாதனையை முறியடித்தது

முதல் நாள் வசூலில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் சாதனையையும் ‘டாக்சிக்’ முறியடித்துள்ளது. இதன் மூலம் யாஷின் திரைப்படம் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது. இருப்பினும், யாஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘கே.ஜி.எப்: 2’ படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை ‘டாக்சிக்’ இன்னும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளிலேயே ரூ.140 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில், வரும் நாட்களில் ‘டாக்சிக்’ திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT