சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி' படத்தின் டிரெய்லர் அப்டேட்

விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

'மாநகரம்' படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து 'கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. சமீபத்தில் ரஜினியை வைத்து 'கூலி' படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை.

இதற்கிடையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'டிசி' என்ற படத்திலும் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் 'தேவதாஸ்' என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக வாமிகா கபியும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் பாலியல் தொழிலாளிகளாக வாமிகாவும் சஞ்சனாவும் நடிக்க, கேங்ஸ்டராக லோகேஷ் நடித்திருப்பதாகத் தெரிகிறது. மேலும், இந்தப் படமும் பழிவாங்கும் கதையாகவே உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.அதன்படி, நாளை மாலை 06 மணியளவில் டிசி படத்தின் டிரெய்லர் சன் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.