சினிமா செய்திகள்

ஆர்யா, நிகிலா விமல் நடிக்கும் ‘ஹலோ காதல்’ படத்தின் டிரெய்லர் அப்டேட்

‘ஹலோ காதல்’ திரைப்படம் டிசம்பர் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

ஹலோ காதல்

மலையாள இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில், நடிகர் ஆர்யா நாயகனாக நடிக்கும் புதிய படம் “ஹலோ காதல்”. இந்தப் படத்தை நடிகர் ஆர்யா மற்றும் சில்வர் கிரெயின் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்துத் தயாரித்துள்ளனர். நடிகர்கள் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நாளை டிரெய்லர்

இது ஆர்யாவின் 40-வது திரைப்படமாகும். ‘ஹலோ காதல்’ திரைப்படம் டிசம்பர் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘ஹலோ காதல்’ படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT