சினிமா செய்திகள்

சம்பளத்தை உயர்த்திய 'டிரெண்டிங்' நடிகை மமிதா பைஜு

தனது சம்பளத்தை ரூ.1½ கோடியில் இருந்து ரூ.2 கோடியாக அவர் உயர்த்தியுள்ளாராம்.

சென்னை,

'பிரேமலு' படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தவர் நடிகை மமிதா பைஜு. தமிழில் 'ரெபல்', 'டியூட்' படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 'டியூட்' படத்தில் 'கருத்த மச்சான்...' பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டம் பெரியளவில் 'டிரெண்ட்' ஆனது.

விஜய்யுடன் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்துள்ள மமிதா பைஜு, தற்போது சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' என்ற புதிய படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தனுசுடன் கர படத்திலும், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இதற்கிடையில் தனது சம்பளத்தை ரூ.1½ கோடியில் இருந்து ரூ.2 கோடியாக அவர் உயர்த்தியுள்ளாராம். சூர்யா படத்தை தொடர்ந்து இன்னும் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளாராம். அதேபோல 'ராங்கி', 'தக்ஸ்', 'வித் லவ்' படங்களில் நடித்துள்ள அனஸ்வரா ராஜன் தனது சம்பளத்தை ரூ.80 லட்சமாக உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.