சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் த.வெ.க. கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. எடப்பாடி தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இது கட்சிக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 74 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக த.வெ.க. முன்னிலை வகிக்கிறது.
இதற்கிடையில், சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு நடிகை திரிஷா நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் வீட்டிலிருந்து வெளியே வந்த அவர், பத்திரிகையாளர்களை நோக்கி வெற்றியின் அடையாளமான ‘தம்ப்ஸ் அப்’ சைகையை காட்டினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.