தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கொதித்து பேசினார். விவாகரத்து கிடைக்கும் வரை இனி படங்கள் நடிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்தநிலையில், ரவி மோகன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளார். விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வழிபடவும் இருக்கிறார்.
இந்த சூழலில் ரவி மோகனுக்கு, நடிகை மீரா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார். மீரா சோப்ரா தனது 'எக்ஸ்' பக்கத்தில், "ரவி மோகனை எனக்கு நன்றாக தெரியும். சமீபத்தில் அவருடைய விவாகரத்து செய்தியை பார்த்தேன். திருமண முறிவுகளில் எப்போதும் ஆண்களே தப்பானவர்களாக இருக்க மாட்டார்கள். பெண்களுக்குச் சாதகமாக இருக்கும் சட்டங்களை, பல பெண்கள் தங்களுக்கு சாதகமாக தவறாகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஆணின் பக்கம் உள்ள நியாயமும் கேட்கப்பட வேண்டும். ரவி மோகன் மிகவும் இனிமையான, எளிமையான மனிதர். அவர் பக்கமுள்ள உண்மையும், நீதியும் வெல்லும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.