சினிமா செய்திகள்

2 தேசிய விருதுகள்.. தனுஷின் சாதனையை கொண்டாடிய சகோதரி

ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து 'கேப்டன் மில்லர்', 'ராயன்' படத்துக்காக நடிகர் தனுஷ் 2 தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார்.

சென்னை,

இரண்டு தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷுக்கு அவரது சகோதரி கார்த்திகா வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்த அங்கீகாரத்தைப் பெறுவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் சிறப்பான உணர்வைத் தருகிறது. எங்களுக்குப் பெருமை சேர்த்துள்ள உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

72-வது தேசிய விருதுகள்

இந்திய சினிமாவில் உள்ள நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகளை இந்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன.

அந்த வகையில் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குஜராத் மாநிலம் கேவடியாவில் உள்ள ஏக்தா நகரில் நேற்று நடந்தது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் நடந்த இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விருதை வழங்கி கவுரவித்தார்.

2 விருது பெற்ற தனுஷ்

ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து 'கேப்டன் மில்லர்' படத்துக்காக நடிகர் தனுஷ் தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார். சமூக மற்றும் தேசிய சமூக சுற்றுச்சூழல் பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், 'ராயன்' படத்தற்கு சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

தனுஷுக்கு அவரது சகோதரி வாழ்த்து

இந்த நிலையில், இரண்டு தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷுக்கு அவரது சகோதரி கார்த்திகா வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று எனது இதயம் பெருமையாலும் உணர்ச்சிகளாலும் நிரம்பியுள்ளது. என் சகோதரர் ஒரு தேசிய விருதை அல்ல, இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளார். இதை எங்களின் குடும்பம் என்றென்றும் பொக்கிஷமாகப் போற்றும் இந்தச் சாதனையின் பின்னணியில் உள்ள அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, போராட்டங்கள் மற்றும் கனவுகளை நான் பார்த்திருக்கிறேன். இந்த அங்கீகாரத்தைப் பெறுவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் சிறப்பான உணர்வைத் தருகிறது. எங்களுக்குப் பெருமை சேர்த்துள்ள உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், என் பிரியமான வெங்கடேசா பிரபு !" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT