சென்னை,
ஆச்சி ஆச்சி என்ற பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏஆர் ரகுமான் இசையில் வெளியாக உள்ள இந்த பாடலின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளார். 'தக் லைப்' திரைப்படத்தைத் தொடர்ந்து, லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரனும் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.
புதிய காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியின் 19-வது படைப்பாக உருவாகி வரும் இப்படத்திற்கு, அவிக் முகோபாத்யாய் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். மேலும், ஷர்மிஷ்டா ராய் கலை இயக்கத்தையும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும், பிருந்தா மாஸ்டர் நடன இயக்கத்தையும் கவனித்துக் கொள்கின்றனர். மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் மற்றுமொரு காதல் திரைப்படம் என்பதால் 'இஞ்சி வெல்லம்' படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இப்படம் 2027-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் 'மீசையை முறுக்கு 2' மற்றும் '418' ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கவனம் ஈர்த்த நடிகை சைத்ரா ஜே. ஆச்சார், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தினை தியேட்டரில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், இந்தபடத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆச்சி ஆச்சி என்ற பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏஆர் ரகுமான் இசையில் வெளியாக உள்ள இந்த பாடலின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.