நடிகர் வைபவ் தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திர நடிகராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் இறுதியாக வெளியான அவரது சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பெருசு திரைப்படம் கவனிக்கப்பட்டாலும் வைபவுக்கு என தனி பாராட்டுகள் கிடைக்கவில்லை.
ஐயப்ப பக்தரின் வாழ்க்கை, அவரது நம்பிக்கை, பக்தி மற்றும் ஆன்மீக பயணத்தை மையமாகக் கொண்டு ஆன்மீக ஆக்ஷன் படமாக, ‘தத் த்வம் அஸி’ உருவாகிறது. ‘மாளிகாப்புரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்குகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பிரேம்ஜி அமரன் பணியாற்றி வருகிறார். வழக்கமாக கலகலப்பான, இளைஞர்களை கவரும் இசையால் அறியப்படும் பிரேம்ஜி, இந்த படத்தில் ஒரு மாறுபட்ட இசை அனுபவத்தை வழங்கப் போகிறார் என கூறப்படுகிறது.
தந்த்ரா பிலிம்ஸ் சார்பில், சுவாமி ஐயப்பனின் மகிமையை சொல்லும் திரைப்படத்தை கேஜே சரவணா தயாரிக்கிறார். ‘தத் த்வம் அஸி’ படம் பான் இந்தியா முறையில் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘தத் த்வம் அஸி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இதில், மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.