சினிமா செய்திகள்

பழம்பெரும் நடிகை வத்சலா காலமானார்: ரசிகர்கள் சோகம்

பல தலைமுறை ரசிகர்களைத் தனது சிரிப்பாலும் நடிப்பாலும் கவர்ந்த இவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகில் தனது இயல்பான நடிப்பினாலும் பாட்டி கதாபாத்திரங்களினாலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை வத்சலா ராஜகோபால் (வயது 93). இவர் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று உயிரிழந்துள்ளார்.

400க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்தவர்

நாடக மேடைகளில் இருந்து திரையுலகிற்கு வந்து, பல தலைமுறை ரசிகர்களைத் தனது சிரிப்பாலும் நடிப்பாலும் கவர்ந்த இவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சதி லீலாவதி, திருடா திருடி, காலமெல்லாம் காதல் வாழ்க, அந்நியன், ரிதம், மொழி, வின்னர் என 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். படங்கள் மட்டுமில்லாமல் சித்தி, ஆனந்தம், முந்தானை முடிச்சு போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

பல்லாவரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலி

நடிகை வத்சலா ராஜகோபால், மறைவு செய்தி திரைத்துறையினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகிறார்கள். வத்சலா ராஜகோபால் உடல் பல்லாவரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT