சினிமா செய்திகள்

‘சைலப்பன் சைக்கிள் மார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட வெற்றி மாறன்!

இளையராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வர உள்ளது.

சென்னை,

வேணு வனம், தாயார் சந்ததி உள்ளிட்ட நூல்கள் எழுதி கவனம் பெற்றவர் எழுத்தாளர் சுகா. இவர் கமல் ஹாசனின் பாபநாசம், இயக்குநர் வெற்றி மாறனின் அசுரன் போன்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் தற்போது ‘சைலப்பன் சைக்கிள் மார்ட்’ என்ற புதிய படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சைலப்பன் சைக்கிள் மார்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.