‘எட்டு தோட்டாக்கள்’, ‘ஜீவி’ படங்களில் நடித்துள்ள வெற்றி, கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘பிளாக் கோல்டு’. ஆக்சன் திரில்லர் படமான இதை தீரன் அருண்குமார் எழுதி இயக்கியுள்ளார். பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ், விஜய் டிவி ராமர்,சபிதா ராய்,ஜீவா ரவி,அஜித் விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்எம் ஸ்டூடியோஸ் சார்பில் எம்.மூர்த்தி வழங்கும் இப்படத்துக்கு சந்தோஷ்குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கவாஸ்கர் அவினாஷ் இசை அமைத்துள்ளார்.
“ஓர் இளைஞனுக்கும், நிழல் உலக வணிக மாபியாக்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டம் இப்படத்தின் கதை. நம் வாழ்வில் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு விஷயம், எப்படி உலக அளவிலான வணிகமாக மாறியது என்பதைப் புதுமையான கதைக்களத்தில் சொல்லும் படம் இது” என்று படக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு படித்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பிற்க்கு பதில் தேடி எந்த அளவிற்கு துணிகிறான் என்பதே இப்படத்தின் கதைக்கரு. நம் வாழ்வில் சாதாரணமாக இருக்கும் சிறு விசயம் ஒன்று, எப்படி உலக வர்த்தகமாகி இருக்கிறது, அதன் பிண்ணனியில் இருக்கும் நிழல் உலக மாபியாக்கள் பற்றி கூறும் இப்படத்தை பரபரப்பான திரைக்கதையில் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது.
‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘பிளாக் கோல்டு’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படம் வரும் ஜூலை 17ம் தேதி வெளியாகிறது.