சினிமா செய்திகள்

வெற்றியின் “பரீட்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டு தனது பணியில் எதிர்கொள்ளும் சவால்களில் இருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பவற்றை மையமாகக் கொண்டு ‘பரீட்’ படம் திரில்லராக உருவாகியுள்ளது.

வெற்றி நடிக்கும் ‘பரீட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை எஸ்.ஆர் பிரபு, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் ஆரி அர்ஜுனா வெளியிட்டனர்.

நடிகர் வெற்றி, என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் திரைப்படம் ‘பரீட்’. ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இதை ‘வெப்’ படத்தை இயக்கிய ஹாரூண் கதை எழுதி இயக்கியுள்ளார். நாயகியாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா நடிக்கிறார்.

சாந்தினி தமிழரசன், பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜான் ராபின்ஸ் இசையமைக்கும் இப்படத்துக்கு கே.வி கிரண் ஒளிப்பதிவு செய்கிறார்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாகப் பணியாற்றும் ஒரு போலீஸ் அதிகாரி தனது பணியில் எதிர்கொள்ளும் சவால்கள், அவை அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள், அந்தச் சூழலிலிருந்து அவர் எவ்வாறு மீண்டு வருகிறார் என்பவற்றை மையமாகக் கொண்டு இப்படம் விசாரணைத் திரில்லராக உருவாகியுள்ளது.

காவல்துறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் முக்கியமான பாடல் ஒன்றை இயக்குநரும் நடிகருமான அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளார். சென்னை, கோவை, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

இந்நிலையில், ‘பரீட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், ‘பரீட்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT