கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

'டார்ச்சர்' செய்து வேலை வாங்கினார் விக்னேஷ் சிவன் - எஸ்.ஜே.சூர்யா

என்னை அன்பு 'டார்ச்சர்' செய்து வேலை வாங்கினார் விக்னேஷ் சிவன் என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, கவுரி கிஷன் நடித்த 'எல்ஐகே' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. படத்தின் வெற்றியை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.

இதில் எஸ்.ஜே.சூர்யா பங்கேற்று பேசும்போது, "இந்த படத்தில் என்னை நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் புதுமையான விஷயங்களை கையாண்டார். 'நீங்க வந்தா நல்லா இருக்கும். இல்லன்னா போட்ட செட் எல்லாம் வீணாகிடும். காசு நஷ்டம் ஆயிடும். இருந்தாலும் பரவாயில்லை', என்று இப்படி சொல்லிக் கொண்டே என்னை அன்பு 'டார்ச்சர்' செய்து படப்பிடிப்புக்கு வர செய்து வேலை வாங்கினார் விக்னேஷ் சிவன்.

'நிச்சயமாக நீங்க பெரிய ஆளாகிடுவிங்க...' என்று நான் வாழ்த்திய பிரதீப் ரங்கநாதன் ஜீரோவில் இருந்து ஹீரோவாகி வந்து நிற்பது நெஞ்சுக்கு நிறைவாக இருக்கிறது. தொழில்நுட்பத்தில் முன்னேறி வரும் இந்த காலகட்டத்தில் புதுமையான விஷயங்கள் அவசியம். அந்த வகையில் செல்போன் இல்லாமல் இருக்க முடியாதுதான். ஆனால் அதற்காக அதிலேயே மூழ்கி விட வேண்டாம் என்று தான் சொல்கிறோம்" என்று குறிப்பிட்டார்.