சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி படத்தின் தீம் பாடல் வெளியானது ...

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரத்தம்' படத்தின் தீம் பாடல் வெளியாகியுள்ளது.

சென்னை,

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள 'ரத்தம்' திரைப்படம் வருகிற அக்டோபர்  6 -ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தீம் பாடல் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. 'போர் மொழியே வெல்லும்' எனும் இந்த தீம் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் ஆண்டனியுடன் மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை  நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ளார். இதற்கு முன் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT