ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, தனது உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்தார். ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னைக்கு வந்திருந்தார்.
சாஹில் மற்றும் வேதிகாவின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூர்யா, கார்த்தி ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் இல்ல திருமண விழாவில் நடிகர் விஜய் பங்கேற்றார்.