சினிமா செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா தம்பதி தரிசனம்

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா தம்பதியினர் இன்று (அக்டோபர் 13) காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

பாரம்பரிய உடையில் தரிசனம்

கோவிலுக்கு வந்த விஜய் தேவரகொண்டா வெள்ளை நிற சில்க் சட்டை மற்றும் வேட்டியிலும், ராஷ்மிகா மந்தனா மஞ்சள் நிறப் புடவை மற்றும் மெஜந்தா நிற ரவிக்கையிலும் பாரம்பரிய உடையில் எளிமையாகக் காட்சியளித்தனர்.

‘ரணபாலி’ பட வெளியீடு

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘ரணபாலி’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி, இருவரும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

திருமணத்துக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இருவரும் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்துள்ளனர்.

முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு

இதற்கு முன்னதாக, நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT