சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டாவின் 14-வது படம்...டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் தேவரகொண்டாவின் 14வது படத்தின் டைட்டில் வரும் 26ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் தேவரகொண்டா தற்போது பிரிட்டிஷ் காலத்தில் நடக்கும் ஒரு வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முன்னதாக சடுகுடு வண்டி மற்றும் ஷ்யாம் சிங்க ராய் போன்ற படங்களை இயக்கிய ராகுல் சங்க்ரித்யன் இயக்குகிறார்.

பிரிட்டிஷ் காலப் பின்னணியில் அமைக்கப்பட்ட விடி14 திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு திரைப்பட நிகழ்வில் பேசிய ராகுல் சங்க்ரித்யன் , விடி14-ல் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பைப் பார்க்கும்போது, நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். அவரது உண்மையான நடிப்புத் திறமையை நீங்கள் காண்பீர்கள் என்று கூறினார். 

இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் 14வது படத்தின் டைட்டில் வரும் 26ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் தேவரகொண்டாவின் 15-வது படமான் ரவுடி ஜனார்தனா படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துவருகிறார்.

SCROLL FOR NEXT