சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா பிறந்த நாள்: போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “ரௌடி ஜனார்தனா” படக்குழு

ரவி கிரண் கோலா இயக்கும் ‘ரௌடி ஜனார்தனா’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகின்றனர்.

ரவி கிரண் கோலா இயக்கத்தில் எஸ்விசி பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் ‘ரௌடி ஜனார்தனா’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இது விஜய் தேவரகொண்டா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் முதல் படமாகும். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் தயாரிக்கிறது. டைட்டில் கிளிம்ப்ஸ் மூலம் இது ஒரு பீரியட் படம் என தெரிகிறது.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. ரஷ்மிகாவுடன் ‘ரணபலி’ எனும் படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.

இந்த நிலையில், ரவி கிரண் கோலா இயக்கிவரும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், "ரௌடி ஜனார்தனாவின் ஆன்மா. உலகத்தை எதிர்த்து சண்டையிடுபவர்... ஆனால், அன்புக்கு மட்டுமே அடிபணிவார். பிறந்த நாள் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ‘ரௌடி ஜனார்தனா’ படக்குழு விஜய் தேவரகொண்டா பிறந்த நாளையொட்டி புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், “ரௌடி ஜனார்தனாவின் ஆன்மா. உலகத்தை எதிர்த்து சண்டையிடுபவர்... ஆனால், அன்புக்கு மட்டுமே அடிபணிவார். பிறந்த நாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT