சினிமா செய்திகள்

விஜய் மில்டனின் “காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்” படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

விஜய் மில்டன் இயக்கும் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தில் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், ராஜ் தருண் நடித்துள்ளனர்.

‘கோலி சோடா' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இயக்குனர் விஜய் மில்டன், ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், ராப் பாடகர் பால் டப்பா, அம்மு அபிராமி, கிஷோர் டிஎஸ், விஜேதா, பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் மூலம் பால் டப்பா நடிகராக அறிமுகமாகிறார்.

இப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் தனது ரப் நோட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து, இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் ராஜ் தருண் நடித்துள்ளார் . இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் கோலிசோடா பாகங்களின் தொடர்ச்சியாக உருவாகிறது. ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில், ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் ஆடியோ உரிமையை சரிகம சவுத் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.