தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளன.
நியூயார்க்கில் நடைபெற்ற 54-வது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெற்றுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘டிரெயின்’ திரைப்படம் டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் கதை முழுவதும் இரயிலில் நடப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடித்த ‘இஞ்சி வெல்லம்’ படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகவுள்ளது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் நடித்த‘பாக்கெட் நாவல்’ திரைப்படம் வரும் ஜனவரி 14ந் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்கான நேர்காணலில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதியிடம், “முதல்-அமைச்சர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியுள்ளீர்கள். அவரின் ஆட்சி எப்படி இருக்கிறது? உங்களுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா?” என கேட்கப்பட்டது.
இதற்கு விஜய் சேதுபதி, “விஜய் சாருடன் நான் பணியாற்றியுள்ளேன். ஆனால், அரசியல் என்பது அவர்கள் போடும் திட்டங்கள் அது சார்ந்த விஷயங்களால் நிறைந்தது. அதை பார்த்துக் கொண்டிருப்பது என் வேலை இல்லை. அரசியலுக்கு வருவது என்பது ஆசை இல்லை; அது சேவை. நாங்கள் நடத்தும் அமைப்பின் மூலம் இதுவரை 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். ஒரு குளத்தைத் தூர்வாரியிருக்கிறோம். பல பேரை படிக்க வைக்கிறேன். இன்னும் சிலவற்றை செய்துகொண்டிருக்கிறோம். இதுவே அரசியல்தான்.
நான் சம்பாதிக்கிற பணத்தைக் கொண்டு இதைச் செய்வதால் சந்தோஷமாகவும் இருக்கிறேன். எங்களுக்கு அரசியல் கருத்தைப் பேசுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், எந்த ஆட்சியாக இருந்தாலும் அதனை நாகரிகமாக ஏற்றுக்கொள்வதில்லை. மேலும், கூர்ந்து கவனிக்காத ஒன்றை குறித்து பேசுவது அறைவேக்காட்டுத்தனம். நாங்கள் சொன்ன விஷயங்களின் மீது சமூக வலைதளங்களால் வருகிற விமர்சனங்கள் எங்கள் படத்தைப் பாதிக்கக் கூடாது” எனக் காட்டமாக பதிலளித்துள்ளார்.
தன்மீதான விமர்சனங்கள் குறித்து பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி “விமர்சனங்கள் நம்மிடம் உயிர்வாழ்வதற்கான உள்ளுணர்வைத் தூண்டி, நம்மை மேலும் வலிமையானவர்களாக மாற்றுகின்றன. இதில் சில முட்டாள்தனமாக இருக்கும்; சில ஆரோக்கியமானதாக இருக்கும். விமர்சனங்கள் இல்லை என்றால் வளர்ச்சியை நோக்கிய சிந்தனை இருக்காது. நாம் என்ன செய்தாலும் பாராட்டுகிறார்கள் என்றால் அது நல்லதல்ல. ஆகையால், விமர்சனங்கள் இருப்பதே நல்லது. சிலர் தேவையில்லாத வதந்திகளைப் பேசுவார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. இதைத் தாண்டி பலருக்கு ஐடி விங்ஸ் இருக்கின்றன. அது ஒரு பக்கம் வேலை செய்யும். அதனால், விமர்சனம் இருந்தால் நாம் அனைவரின் பார்வையிலும் இருக்கிறோம் என்று அர்த்தம். இல்லையென்றால் கூட்டத்தில் கரைந்துவிட்டோம் என்று அர்த்தம்” என்று கூறியுள்ளார்.
“பிக்பாஸ்” நிகழ்ச்சியில் தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி “லீடர் மற்றும் லீடர்ஷிப் என்றால் என்னவென்றே தெரியாமல், வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியை தூக்கிப்போட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை. அதற்கு பெயர் ஏமாற்று வேலை” என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இவர் முதல்-அமைச்சர் விஜய்யைதான் தாக்கி பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனை பார்த்து கடுப்பான விர்ச்சுவல் வாரியர்ஸ், விஜய் சேதுபதி மீது முன்பு எழுந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் லிஸ்ட் போட்டு ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இந்த சர்ச்சை விவகாரங்களுக்கு விஜய் டிவி தரப்பில் நிகழ்ச்சியை ஒட்டியே விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாகவும் அதனை நிகழ்ச்சிக்கு வெளியே யாரோடும் ஒப்பிடக்கூடாது எனவும் தெரிவித்திருந்தது.