சினிமா செய்திகள்

ரீ-ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் "சூது கவ்வும்" திரைப்படம்

வருகிற 20ந் தேதி இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

சென்னை,

அண்மைக்காலமாக பழைய திரைப்படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் ரீ ரிலீசாகி வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம், கமலஹாசனின் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன், விஜய் நடித்த கில்லி, அஜித்தின் மங்காத்தா, சிம்புவின் சிலம்பாட்டம், மாதவனின் 'மின்னலே' போன்ற திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆகி வசூலை அள்ளியது.

இந்த நிலையில், வருகிற 20ந் தேதி நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான "சூது கவ்வும்" ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த படத்திற்கான டிக்கெட் கட்டணம் ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி மற்றும் எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.