சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் “டிரெயின்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் மிஷ்கினே ‘டிரெயின்’ படத்தினை இசையமைத்து இயக்கியுள்ளார்.

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘டிரெயின்’ படம் வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டிரெயின்’. இந்தப் படத்தில் சுருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், யுகி சேது, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளார்.

ஒரே இரவில் ரெயிலில் நடக்கும் திரில்லர்

‘டிரெயின்’ திரைப்படம், ஒரே இரவில் ரெயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்ட டார்க் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.

நீண்ட நாள்களாக வெளியாகாமல் இருந்த இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

சுருதி ஹாசன் பாடிய ‘டிரெயின்’ படத்தின் முதல் பாடல்

‘டிரெயின்’ படத்தின் முதல் பாடலான 'கன்னக்குழிக்காரா' வெளியானது. மிஸ்கின் இசையில் கபிலனின் வரிகளில் சுருதி ஹாசன் இப்பாடலை பாடியுள்ளார்.

பிடிஎஸ் வீடியோ வெளியானது

‘டிரெயின்’ திரைப்படத்தின் பிடிஎஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அதில், படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் மிஷ்கின் காட்சிகளை மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கும் விதமும், நடிகர் விஜய் சேதுபதி தனது கதாபாத்திரத்திற்காக எடுத்துக் கொண்ட அர்ப்பணிப்பும் இடம்பெற்றுள்ளன.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த நிலையில், ‘டிரெயின்’ படம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT