சென்னை,
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்று கிடைக்காததால் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தும் சாதகமான உத்தரவு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் சென்சார் போர்டிடம் மறு தணிக்கைக்கு ஜனநாயகன் படம் அனுப்பப்பட்டுள்ளது. மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டாலும் படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாத நிலை இருப்பதால் விஜய் ரசிகர்கள் சோகம் அடைந்தனர். இந்த நிலையில், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு அப்டேட் வெளியாகியிருக்கிறது.
விஜய்க்கு கமர்ஷியல் ரீதியாக பெரும் வெற்றிப்படமாக அமைந்த தெறி படம் வரும் 20 ஆம் தேதி ரி ரீலிஸ் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால், பொங்கல் ரிலீஸ் படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால், தெறி ரீ-ரிலீஸை கடந்த மாதம் 23-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். ஆனால் அப்போது வெளியாக இருந்த திரவுபதி 2 படக்குழுவினர் கேட்டுக் கொண்டதால் படம் ரி ரீலிஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் 20-ஆம் தேதி தெறி படம் ரீ ரிலிஸ் ஆகும் என்று புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தெறி படம் இந்த மாதம் ரி ரிலீஸ் செய்யப்படுவதால் ஜனநாயகன் பிப்ரவரியில் வெளியாக வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இது விஜய் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.