சினிமா செய்திகள்

விஜய்யின் “ஜனநாயகன்” பட ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் ‘ஜனநாயகன்’ படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் விஜய் பதவியேற்பு விழாவில் அறிவித்திருந்தார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் தணிக்கை பிரச்சினையால் வெளியாகவில்லை. இதனால் படத்தின் ஓடிடி உரிமையும் ரத்து செய்யப்பட்டது. மேலும், படமும் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் கடும் சிக்கலில் இருந்தனர்.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக கட்சியினர் பெரும் வெற்றி பெற்று விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார். இதனால் ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால், மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால் தமிழக உரிமை விற்பனை பழைய நிலையிலேயே தொடரும் எனக் கூறப்படுகிறது.

விஜய் தற்போது முதல்- அமைச்சராகியிருப்பதால் படத்தின் டைட்டில் கார்டு முதல்வர் விஜய் என்று மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது குறித்து பேசிய கேவிஎன் புராடெக்‌ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கட் நாராயணா, சட்ட விதிமுறைகள் அனுமதிக்கும் பட்சத்தில் டைட்டில் கார்டு மாற்றப்படும் என்று கூறியுள்ளார். சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் ‘ஜனநாயகன்’ படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் நாராயணாவும் விஜய் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொண்டார். விஜய் கவர்னரை சந்திக்க செல்லும்போது, இவரும் உடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், முதலில் அமேசான் நிறுவனம் ‘ஜனநாயகன்’ படத்துக்காக போட்ட ஓடிடி ஒப்பந்தத்தை ரத்து செய்தது. தற்போது பல்வேறு நிறுவனங்கள் ‘ஜனநாயகன்’ படத்தின் ஒடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டியிட்டு வருகிறார்கள். இதனால் படக்குழுவினர் உற்சாகமாகி இருக்கிறார்கள்.