சினிமா செய்திகள்

முதல்-அமைச்சர் கோட் சூட் காட்சியுடன் வெளியான விஜய்யின் “ஜனநாயகன்” பட புரோமோ வீடியோ

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கோட் சூட் காட்சி, சட்டமன்ற சைகையுடன் விஜய்யின்‘ஜனநாயகன்’ படத்தின் புரோமோ வீடியோ வெளியானது.

தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,

தணிக்கைப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வருகிற 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3,500 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் செய்யும் சைகை , முதல்-அமைச்சர் கோட் சூட்டுடன் வந்து போவது போன்ற புரோமோ வீடியோ வெளியானது.