சினிமா செய்திகள்

விக்ரமின் 64வது பட அப்டேட்

விக்ரமின் 64வது படத்தை ‘இருமுகன்’ பட இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் ‘வீர தீர சூரன் 2’ படத்தைத் தொடர்ந்து ‘மாவீரன்’ இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், சில காரணங்களால் அப்படம் துவங்கவில்லை.

தொடர்ந்து, அறிமுக இயக்குநர் பொடி கே. ராஜ்குமார் இயக்கத்தில் விக்ரம் தன் 63-வது படத்தில் நடிக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், விக்ரமின் 64வது படத்தை 'இருமுகன்' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாகவும், படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் உறுதியாகியுள்ளது.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஏப்ரல் 17ம் தேதியன்று விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது."