கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிப் போனேன் - கயாடு லோகர்

சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜம் என்று நடிகை கயாடு லோகர் தெரிவித்துள்ளார்.

'டிராகன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை கயாடு லோகர், தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சமீபத்தில் வெளியான 'இதயம் முரளி' படத்திலும் பேசப்பட்டார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி உடன் இணைந்து அவர் நடித்த 'தி பாரடைஸ்' திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

இதற்கிடையில் எத்தகைய விமர்சனத்தையும் ஏற்க பழகிக் கொண்டதாக கயாடு லோகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "சினிமாவுக்கு வந்த புதிதில் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் கொஞ்சம் திணறிப் போனேன். ஆனால் போகப்போக ஓரளவு நிலைமையை உணர்ந்து கொண்டு வருகிறேன்.

எத்தகைய விமர்சனமாக இருந்தாலும் அதை ஏற்க பழகிக் கொண்டு இருக்கிறேன். சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜம். தொடர்ந்து கடின உழைப்பை கொடுக்காமல் இருந்தால் தான் தவறு". என்று அவர் கூறியுள்ளார். கயாடு லோகர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT