சினிமா செய்திகள்

கோலி- அனுஷ்கா சர்மாவுக்கு திருமணம் நடக்குமா? செய்தி தொடர்பாளர் விளக்கம்

கோலி- அனுஷ்கா சர்மாவுக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா என்பது குறித்து செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்து உள்ளார்

மும்பை

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட்டின் 3 நிலை அணிகளிலும் கேப்டனாக இருப்பவருமான வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்த படங்களை அவர்களே வெளியிட்டு இருந்தனர். தொடக்கத்தில் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் மீண்டும் ஒன்றாக இணைந்தனர்.

இந்திய அணி, தற்போது இலங்கை அணியுடனான தொடர்களில் விளையாடி வருகிறது. இத்தொடரில் அணியின் தலைவரான கோலி தனிப்பட்ட காரணங்கள் காரணமாக தனக்கு விடுப்பு வழங்கும்படி கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டு இருந்தார்.

இந்த நிலையில் வீராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம் டிசம்பர் 2-வது வாரத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைறும் எனகூறப்பட்டது. இந்த திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள் கிறார்கள்.

திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.டிசம்பர் 21 ம் தேதி மும்பையில் நடைபெறும் வரவேற்புக்கு இந்த ஜோடி அனைத்து நண்பர்களை அழைக்கும்.

அனுஷ்காவின் திருமண ஆடைகளை ஆடை வடிவமைப்பாளரான சப்பாசிச்சி முகர்ஜி வடிவமைத்து உள்ளார். கடந்த வாரம் அனுஷ்கா சர்மாவின் வீட்டிற்கு அவர் வந்து சென்று உள்ளார்.

திருமணம் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறுகிறது. ஆனால் இது குறித்து இருவர் தரப்பில் இருந்தும் அதிகாரபூர்வமான தகவல் இல்லை.

இந்த நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு வீராட் கோலியின் செய்தி தொடரபாளர் பேட்டி அளீத்த போது கோலிக்கு திருமணம் நடக்க போவதாக வந்த செய்திகளில் துளி கூட உண்மை இல்லை. அவர் உடல் ஓய்விற்காகவே விடுமுறை கேட்டு இருந்தார். அவர் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ஓய்வின்றி விளையாடிக் கொண்டு இருக்கிறார்.

இது போன்று ஓவ்வொரு முறையும் திருமணம் குறித்து தகவல் வெளியாவதும் பின்னர் அது மறுக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.

SCROLL FOR NEXT