சினிமா செய்திகள்

விஷாலின் “புருஷன்” படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ படத்தில் விஷால், தமன்னா, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புருஷன்’. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் வெளியான ‘மதகஜராஜா, ஆம்பள, ஆக்சன்’ ஆகிய 3 படங்களின் வெற்றியை தொடர்ந்து உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ‘ஆம்பள’ படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர் சி படத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார்.

ஆக்சன் கலந்த நகைச்சுவைக் கதைக்களத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை தமன்னா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை அவ்னி சினிமாக்ஸ், பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கிறது..

‘புருஷன்’படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளதாக நடிகர் விஷால் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ‘புருஷன்’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட படப்பிடிப்பு வீடியோவை படத்தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. வீடியோவில் இயக்குநர் சுந்தர் சி, தமன்னா, விஷால், யோகி பாபு, வி.டி.வி. கணேஷ் மற்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் படம் பற்றி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.