சினிமா செய்திகள்

விஷ்ணு விஷாலின் “இரண்டு வானம்” படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு

விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடித்துள்ள ‘இரண்டு வானம்’ படத்தை ராம்குமார் இயக்கியிருந்தார்.

விஷ்ணு விஷாலின் ‘இரண்டு வானம்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து இவர், குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி, ஆர்யன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக ‘கட்டா குஸ்தி 2’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர் ராம்குமார்- விஷ்ணு விஷால் கூட்டணி

அதனை தொடர்ந்து ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் 3-வது முறையாக விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘இரண்டு வானம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இளம் நடிகை மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில், டி.ஜி. தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

வாழ்க்கையில் உண்மையான அன்பு கிடைக்கும்போது, ஒரு மனிதருக்குள் எப்படியெல்லாம் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை மையமாகக் கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது

கொடைக்கானலில் 150 நாள்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்திருந்த நிலையில், வரும் அக்டோபர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு

இந்த நிலையில், விஷ்ணு விஷாலின் ‘இரண்டு வானம்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுதாக சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT