சினிமா செய்திகள்

விஜே சித்துவின் “டயங்கரம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

விஜே சித்து இயக்கி, நடிக்கும் ‘டயங்கரம்’ படத்தில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

தமிழ் யூடியூபர்களில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவர் வி.ஜே.சித்து. நிகழ்ச்சித் தொகுப்பாளர் , பிராங் ஷோ என கரியரைத் தொடங்கிய விஜே சித்து தற்போது சித்து விளாக்ஸ் என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். ‘டிராகன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

தமிழ் சினிமாவில் வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்ப்பில் ‘டயங்கரம்’ படத்தை தயாரிப்பாளர் ஐசாரி கணேஷன் தயாரிக்கிறார். இந்த படத்தினை எழுதி, இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார் விஜே சித்து. இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர், புரோமோ வீடியோ வெளியாகி வைரலானது. இந்த படத்தில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சித்து குமார் இசையமைக்கும் இந்த படத்துக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு மேற்கொள்ள பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். காமெடி, எமோஷன் உள்ளிட்டவை கலந்த கதையாக உருவாகி வரும் இந்த படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படத்தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விஜே சித்துவின் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.